Friday, 2 September 2016

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுராந்தகம் வட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: வையாவூரில் சிதண்டி, அத்தியூர், அச்சிறுப்பாக்கத்தில் திம்மாபுரம், கீழ்பட்டு, ஓணம்பாக்கத்தில் தொன்னாடு, பெரும்பாக்கத்தில் கூடலூர், சிறுநாகலூர், எல்.எண்டத்தூரில் வேடந்தாங்கல், செம்பூண்டி, கிளியாநகர், கருங்குழியில் பசும்பூர், ஒரத்தியில் சிறுதாமூர், எடையாளம், மதுராந்தகத்தில் மாரிபுத்தூர் ஜமீன் எண்டத்தூர், சித்ரவாடி, கடப்பேரி ஆகிய பகுதிகளில் 16 பணியிடங்கள் உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிகள்: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மதுராந்தகம் வட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். 2016 ஜூலை 1-ஆம் தேதி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள்ளும், முற்பட்ட வகுப்பு பிரிவினருக்கு 21 வயது முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, இருப்பிட ஆதாரம், சாதிச்சான்று மற்றும் புகைப்படம் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும், விதவைச் சான்று, மாற்றுத் திறனாளி சான்று ஆகியவை தேவைக்கேற்றபடி இணைக்கப்பட வேண்டும். செப்டம்பர் கடைசி வரை விண்ணப்பதாரர்கள், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment