Friday, 2 September 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா- சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா- சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட (இடமிருந்து) டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.விஜயராகவன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் (திட்டமிடல், வளர்ச்சி) எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட (இடமிருந்து) டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.விஜயராகவன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் (திட்டமிடல், வளர்ச்சி) எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனம்- சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இது குறித்த விவரம்:- தமிழகத்தில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் டயர்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம்- சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.விஜயராகவன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் (திட்டமிடல், வளர்ச்சி) எஸ்.வைத்தியசுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.இதன்படி வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகளுக்கு "ஃபினிஷிங் ஸ்கூல் புரோகிராம்' என்ற ஆறுமாத காலம் கொண்ட வகுப்புகள் நடத்தப்படும்.இதில் தொழில்நுட்ப கள கோட்பாடு, செய்முறை வகுப்புகள், மேலாண்மை, தகவல் தொடர்பு, மென் பொருள் செயல்திறன், தொழில்திறன் மேம்பாடு உள்பட நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும்.விஜயதசமியன்று (அக்.11) தொடங்கவுள்ள பாட வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவை மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பாடத் திட்டத்தில் சேரக்கூடிய மாணவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்யவும், வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும் இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்படும்.


No comments:

Post a Comment