Saturday, 3 September 2016

விமான நிறுவனத்தில் 961 டெக்னீசியன் பணி

விமான நிறுவனத்தில் 961 டெக்னீசியன் பணி
ஏர் இந்தியா நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றான இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL) நிறுவனத்தில் 961 ஏர் கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07-2016 தேதியின்படி 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் 30.09.2016-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல் மற்றும் சான்றிகள் நகல்களை Post box no.12006, Cossipore Post Office,Kolkata 700002 என்ற முகவரிக்கு 31.10.2016-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய விரும்புபவர்கள் www.airindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment