Saturday, 3 September 2016

பெரம்பலூர் மாவட்டத்தில் 8 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 8 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மாத தர ஊதியம் ரூ. 4,800-6,000, ரூ. 10,800. பெரம்பலூர் வட்டம், கீழக்கரை பணியிடத்துக்கு ஆதிதிராவிடர், எளம்பலூர் பணியிடத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், செங்குணம் பணியிடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். மேலப்புலியூர் (கி) பணியிடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர், லாடபுரம் (மே) பணியிடத்துக்கு ஆதிதிராவிடர், பொம்மனப்பாடி பணியிடத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்.
வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை பணியிடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்), குன்னம் வட்டம், எழுமூர் பணியிடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்து, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் 35 வயது மிகமால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயது மிகாமல், பொதுப்பிரிவினர் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பத்துடன் 2 சான்றொப்பம் இடப்பட்ட நகல்கள் இணைத்து அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக செப். 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-277201, 264201, 258370 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment