Tuesday, 6 September 2016

மத்திய அரசில் 623 பணிகள்

மத்திய அரசில் 623 பணிகள்
மத்திய அரசுத் துறைகளில் 623 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது.
'ஸ்டாப் செலக்சன் கமிஷன்' எனப்படும் மத்திய அரசு அலுவலர் தேர்வு ஆணையம், பல்வேறு மத்திய துறைகளில் ஏற்பட்டுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 8 துறைகளில் சீனியர் ரிசர்ச் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 20 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இதேபோல வடகிழக்கு மண்டலத்தில் பல்வேறு வேலைகளுக்கு 102 பணி யிடங்களும், வடமேற்கு மண்டலத்தில் 171 பணியிடங்களும், கே.கே.ஆர் எனப்படும் கர்நாடக, கேரள மண்டலத்தில் 51 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில் 279 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. மொத்தம் 623 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பிளஸ்-2, டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் என அனைத்து தரப்பு படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை இணைய தளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு.
தகுதி உடையவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 26-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment