Tuesday, 6 September 2016

எல்லைக் காவல் படையில் 372 வேலை வாய்ப்புகள்

எல்லைக் காவல் படையில் 372 வேலை வாய்ப்புகள்
எல்லைக் காவல் படையில் 372 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:- 'பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.)' எனப்படும் எல்லைக் காவல் படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் சி.டி. (குரூவ்) பணிக்கு 176 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 22 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்பு தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல், உடல் அளவு தேர்வு, உடல்திறன் சோதித்தல், திறமைத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.50 கட்டணத்தை டி.டி. அல்லது அஞ்சல் ஆணையாக இணைத்து அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம், தேவையான சான்றுகள் இணைத்து அனுப்பப்பட வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பம், அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்டு 20-26 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் (ஜி.டி.) பணிக்கு 196 இடங்கள் நிரப்பப்படுகிறது. 1-8-16 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து The Commandant, 25 Bn BSF, Chhawla Camp, Post Office-Najafgarh, New Delhi, Pin Code 110071 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவான விவரங்களை www.bsf.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment