Tuesday, 6 September 2016

உளவுத்துறை அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு 320 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது


உளவுத்துறை அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு 320 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
உளவுத்துறை போலீஸ் அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 320 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-மத்திய புலனாய்வு போலீஸ் படைப்பிரிவுகளில் ஒன்று 'இன்டலிஜென்ஸ் பீரோ'. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த உளவுப் பிரிவில் 2016-ம் ஆண்டுக்கான ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் - கிரேடு-2) பணிக்கான தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் மூலம் 320 காலி யிடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 190 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 43 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 57 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் உள்ளன. இவை 'குரூப்- சி' பிரிவில் வரும் நான்- கெசட்டடு அதிகாரி பணியாகும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
கல்வித் தகுதி:
மேல்நிலைக் கல்வியில் (பிளஸ்-2) கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்தவர்கள் அல்லது 2 ஆண்டு ஐ.டி.ஐ. பிரிவில் ரேடியோ டெக்னீசியன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் படிப்பு களை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு, கல்வித்தகுதி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு தாள்-1, தாள்-2 என இரு பிரிவாக நடைபெறும்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது. இணையதள செலான் மூலம், ஸ்டேட் வங்கி கிளைகளில் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் 24-9-2016-ந் தேதிக்குள்ளாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை 50 கே.பி. அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தேவையான இடத்தில் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mha.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


No comments:

Post a Comment