Tuesday, 30 August 2016

வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள்

வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள்
பிரபல வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிக்கு 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 191 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.1-7-2016 தேதியில் 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், ஐ.டி உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள், ஆர்கிடெக்சர், அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர் களுக்கும் வாய்ப்புகள் உள்ளன.ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.9-9-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான ஆன்லைன் தேர்வு 14-10-2016 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.pnbindia.in
ஸ்டேட் வங்கி
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 33 இடங்கள் நிரப்பப்படுகிறது. எம்.பி.ஏ (நிதி, மார்க்கெட்டிங்), பி.இ., பி.டெக், படித்தவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். தகுதியானவர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 5-9-2016-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment