Wednesday, 24 August 2016

வங்கியில் பணிகள்

வங்கியில் பணிகள்
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட்/கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
1-8-2016-ந் தேதியில் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் கிளார்க் பணிகளுக்கும், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-8-2016
இது பற்றிய விரிவான விவரங்களை www.repcobank.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment