Tuesday, 9 August 2016

மின் நிறுவனத்தில் வேலை

மின் நிறுவனத்தில் வேலை
இந்திய மின்தொகுதி கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது டிப்ளமோ டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எலக்ட்ரிக்கல் பிரிவில் 50 பணியிடங்களும், சிவில் பிரிவில் 12 இடங்களும், இ.சி. பிரிவில் 3 இடங்களும் உள்ளன. இது தவிர வேதியியலர் பணிக்கு ஒரு இடமும், ஜூனியர் டெக்னீசியன் (எலக்டரிக்கல்) பணிக்கு 10 இடங்களும் உள்ளன. மொத்தம் 76 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும், வேதியியல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. (எலக்ட்ரிக்கல்) படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-8-2016-ந் தேதியாகும். விண்ணப்ப கட்டணம் 19-8-2016-ந் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களை http://www.powergridindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment