Wednesday, 24 August 2016

மின் நிறுவனத்தில் வேலை

மின் நிறுவனத்தில் வேலை
தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி. இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமாகும்.42 கிளைகளுடன் 47 ஆயிரத்து 178 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் நிதி நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி, சுரங்க சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு 84 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நிதி நிர்வாக அதிகாரி பணிக்கு 30 இடங்களும், பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 10 இடங்களும், மருத்துவ அதிகாரி பணிக்கு 20 இடங்களும், சிறப்பு மருத்துவ அதிகாரி பணிக்கு 22 இடங்களும் உள்ளன. மைன் சர்வே பணிக்கு 4 இடங்களும், ஆபரேசன் (எஸ்.ஏ.பி.) பணிக்கு 8 இடங்களும் உள்ளன.
எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு, சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படிப்புகள், சிவில் மைனிங், மைன் சர்வே டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 7-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.ntpc.co.in மற்றும் www.ntpccareers.net ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment