Wednesday, 24 August 2016

மருத்துவ பேராசிரியர் பணிகள்

மருத்துவ பேராசிரியர் பணிகள்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி. எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குடும்ப நலத் துறையில் பேராசிரியர் (ஸ்பெஷலிஸ்ட்- அனஸ்தீசியா) பணிக்கு 75 இடங்கள், மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் 30 இடங்கள் உள்பட மொத்தம் 146 பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேளாண்மைத்துறை, வர்த்தகத்துறை, பாதுகாப்புத் துறை, மனிதவளத் துறை, மருத்துவகல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.
அனஸ்தீசியா, மருந்து, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் போன்ற மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜிகல், ஐ.டி., டெக்ஸ்டைல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு உள்ளது.
அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக விரிவான விவரங்களை படித்து அறிந்து கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 1-9-2016-ந் தேதி. விரிவான விவரங்களுக்கு பார்க்க வேண்டிய இணையதள முகவரி www.upsc.gov.in


No comments:

Post a Comment