Tuesday, 30 August 2016

டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை
நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர் களுக்கு 332 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எஸ்.இ.சி.எல் எனப்படும் தென்கிழக்கு மண்டல நிலக்கரி நிறுவனம் மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மைனிங் சர்தார், டி அண்ட் எஸ் போன்ற கிரேடு-சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 332 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக, பொது - 167 இடங்கள், ஓ.பி.சி. - 43 இடங்கள், எஸ்.சி. - 46 இடங்கள், எஸ்.டி. - 76 இடங்கள் உள்ளன.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30-9-2016 தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மைனிங் சர்தார், மைன் சர்வேயிங் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுசெய்யும் முறை:
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-9-2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து தேவையான சான்றுகள், புகைப்படம் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 30-9-2016-ந் தேதி.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய முகவரி:-
General Manager (Manpower), South Eastern Coalfields Limited, Post Box No 60, Seepat Road, Billaspur, Chhatisgarh, Pin 495 006
விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.secl.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


No comments:

Post a Comment