Wednesday, 24 August 2016

ஐ.ஐ.டி.யில் வேலை

ஐ.ஐ.டி.யில் வேலை
புகழ்பெற்ற கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப மையம் (ஐ.ஐ.டி.) பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. கான்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. மையத்தில் பதிவாளர், இணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, கவுன்சலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 94 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
10-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு, முதுநிலை படிப்பு என அனைத்து தரப்பு படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் 30-8-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.7-9-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.iitk.ac.in/infocell/recruitment என்ற இணைய 'லிங்'கில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment