Thursday, 11 August 2016

துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள துப்புரவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, ஆரம்பப் பள்ளியில் அடிப்படைக் கல்வி பயின்று சான்று பெற்றும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.இதுகுறித்து சென்னை, சாந்தோம், ஜெயப்பிரகாஷ்நாராயண் மாளிகை, 2-ஆவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), துணை இயக்குநர் அலுவலரிடம் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் 5.45 மணிக்கும் நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதோடு, பணியிடம் தொடர்பான கூடுதல் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் (பொ) அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment