Tuesday, 30 August 2016

பயிற்சி பணி

பயிற்சி பணி
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. பெங்களூரில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 18 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 276 இடங்களும் உள்ளன. மொத்தம் 294 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம். 16-8-2016 முதல் 31-8-2016 வரை வேலை நாட்களில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.bheledn.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, தேவையான சான்றுகளுடன் நேரில் செல்லவும்.


No comments:

Post a Comment