Thursday, 18 August 2016

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தாற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தாற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தாற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சமூகப் பாதுகாப்புத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்துக்கு ஆற்றுப்படுத்துநர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் ஆகியோர் முற்றிலும் தாற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இப்பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை www.namakkal.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 16, கண்டர் பள்ளி சந்து, மோகனூர் சாலை, நாமக்கல்-637 001 என்ற முகவரிக்கு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சி, டி பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: சமூகப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் கல்வி பயிலும், பயின்ற மாணவ, மாணவியர்களைக் கொண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சி, டி பிரிவு பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் நிரப்ப பரிசீலனை செய்ய ஏதுவாக, விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.socialdefence.tn.gov.in  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழின் நகலுடன் வரும் 19-ஆம் தேதிக்குள் இயக்குநர், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-26426421, 26427022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


No comments:

Post a Comment