Thursday, 18 August 2016

கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு

கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு
கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்த 6 கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மட்டிகைகுறிச்சி, கீழ்புண்டி, பொறையூர், சித்தாத்தூர், சித்தேரி, தென்தொரசலூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராம உதவியாளர்கள் இல்லாமல் இருந்து வந்தது. அந்த இடங்களை நிரப்புவதற்காக வட்டாட்சியர் அறிவித்திருந்தார்.
அறிவிப்பின் பேரில் 190 பேர் மனு செய்திருந்தனர். அதில் 68 பேருக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைப்பாணை விடுத்திருந்தனர். அதில், 53 பேர் பங்கேற்றனர். பெண்கள் கைக் குழந்தையுடன் பங்கேற்றனர்.
நேர்முகத் தேர்வை வட்டாட்சியர் க.ராஜூ நடத்தினார். தேர்வில் பங்கேற்றவர்களுக்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெ.கமலக்கண்ணன் சான்றிதழ் வழங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் சு.இந்திரா ஆய்வு மேற்கொண்டனர்.
வருவாய் ஆய்வாளர்கள் சேகர், சிலம்பரசன், கோபு, கிராம நிர்வாக அலுவலர் எழில் உள்ளிட்டோர் எழுத படிக்கும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்டும் திறன் ஆகியவைகளை ஆய்வு செய்தனர்.


No comments:

Post a Comment