Wednesday, 24 August 2016

உருக்கு நிறுவனத்தில் வேலை

உருக்கு நிறுவனத்தில் வேலை
இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் (செயில்- sail ) நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்படுகிறது. தற்போது கொல்கத்தாவில் செயல்படும் செயில் நிறுவன கிளையில் மருத்துவ அதிகாரி, ஆபரேட்டர் கம் டெக்னீசியன், மைனிங் போர்மேன், மைனிங் மேட், சர்வேயர், பாரா மெடிக்கல் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 195 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக மைனிங் மேட் பணிக்கு 60 இடங் களும், பாராமெடிக்கல் ஸ்டாப் பணிக்கு 27 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 15 இடங்களும், மைனிங் போர் மேன் பணிக்கு 31 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 24 இடங்களும் உள்ளன.
எம்.பி.பி.எஸ்., டிப்ளமோ மைன் என்ஜினீயரிங், பார்மசி டிப்ளமோ, பி.எஸ்.சி. ரேடியோகிராபி, பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணைய தளத்தில் பார்க்கலாம்.
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 31-8-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sail.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்


No comments:

Post a Comment