Saturday, 20 August 2016

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு எழுதும் ஏழை பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க சென்னையில் ராணி மேரி கல்லூரியிலும், மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 8-ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில், இப்போது ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு ராணி மேரி கல்லூரி அலுவலகத்தை 044 - 28444995 என்ற தொலைபேசியிலும், ஸ்ரீ மீனாட்சி அரசு கல்லூரி அலுவலகத்தை 0452 2534 988 என்ற தொலைபேசியிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment