Tuesday, 16 August 2016

இஸ்ரோ மையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்

இஸ்ரோ மையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்
இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 249 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் கிளை அமைப்பு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் (எஸ்.ஏ.சி.). அகமதாபாத்தில் செயல்படும் இந்த மையத்தில் ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 249 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...
கல்வித்தகுதி:
பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் எம்.பி.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் கணிசமான பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
வயது வரம்பு:
29-8-2016 தேதியில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, நேர்காணல், திறமைத் தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் புகைப்படம் மற்றும் தேவையான சான்றுகளை இணைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். தேர்வுக்கு அழைக்கப்படும்போது இதை ஒப்படைக்க வேண்டும்.
முக்கிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-8-2016
ஸ்கேன் செய்த மதிப்பெண் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 31.8.2016
விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை அறியவும் www.sac.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


No comments:

Post a Comment