Monday, 15 August 2016

பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயிலும், பயின்ற மாணவ, மாணவிகளின் பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:   சமூகப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயிலும் மாணவ மாணவிகளை கொண்டு காலியாக உள்ள, "சி' (எழுதபடிக்கத் தெரிந்த பதிவுரு எழுத்தர்), "டி' (அலுவலக உதவியாளர்) பிரிவு பணியிடங்களை விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.இதற்காக பரிசீலனை செய்ய ஏதுவாக, விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமோ அல்லது www.socialdefence.tn.gov.in  என்ற இணையதளம் மூலமே பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகலுடன் வரும் 19-ஆம் தேதிக்குள் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர், எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044- 26426421, 044-26427022 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment