Sunday, 14 August 2016

"ஆண்டுக்கு இரண்டுமுறை மெகா வேலைவாய்ப்பு முகாம்கள்'

"ஆண்டுக்கு இரண்டுமுறை மெகா வேலைவாய்ப்பு முகாம்கள்'
ஆண்டுக்கு இரு மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் டி.மணிகண்டன் தெரிவித்துள்ளார். மாநாட்டில் அவர் பேசியது: புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையில் மின்னணு ஆட்சிமுறை தீவிரமாக செயல்படுத்தப்படும்.  புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 73 அடிப்படை பொதுச் சேவைகள் இணையதளம் மூலம் கிடைக்க வகை செய்யப்படும். குறிப்பாக பொதுச் சேவை மையங்கள் (இநஇ) மூலம் அவற்றைப் பெறலாம். நாட்டிலேயே முதன்முறையாக அபிஷேகப்பாக்கம் கிராமம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை, அரசு, தொழில்துறையினர் இணைந்து செயல்படும் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளும் இணையம் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரிய மாநிலங்களில் புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி தரப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கான வரைவு தகவல் தொழில்நுட்பக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. அரசின் பரிசீலனைக்கு அதை வைக்க உளளோம். முதன்முறையாக இந்தியாவிலேயே மாதிரி வேளாண் கிராமம், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் 4 துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கும். மேலும் கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நிலை குறித்து கண்காணிக்க தனியாக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  இதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஆண்டுக்கு இரண்டு மெகா வேலைவாய்ப்பு முகாம்கள், முன்னணி ஐடி நிறுவனங்களை அழைத்து நடத்த உள்ளோம். ஒரு மாதகாலத்தில் 100 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன என்றார் மணிகண்டன்.


No comments:

Post a Comment