Monday, 8 August 2016

என்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரி வேலை

என்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரி வேலை 
இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்டகால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறுவார்கள். தற்போது 27-வது 'யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் - ஜூலை 2018' என்ற பயிற்சித் திட்டத்தில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களை அதிகாரி பணிக்கு சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 30 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2018 தேதியில் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-7-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், பவர் சிஸ்டம் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜிகல் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) அமைப்பால் தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-8-2016-ந் தேதி முதல் 8-9-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.


No comments:

Post a Comment