Monday, 8 August 2016

வேளாண் அதிகாரி பணிகள்

வேளாண் அதிகாரி பணிகள் 
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) மற்றும் அதன் கல்வி மையங்களில் ஏற்படும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியம் (ஏ.எஸ். ஆர்.பி.) செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு, பல்வேறு இடங்களில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி மையங்களில் அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை கோரி உள்ளது. இணை இயக்குனர், இயக்குனர், திட்ட ஒருங்கிணைப்பாளர், எச்.ஓ.டி. போன்ற அதிகாரி பணிக்கு மொத்தம் 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண் அறிவியல், உயிரியல், மரபியல், உயிரி தொழில்நுட்பம், வனவியல், தோட்டக் கலைத்துறை, சுற்றுச் சூழலியல், நீரியல், கால்நடை அறிவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. பொருளாதாரம், புள்ளியியல் பாடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் சில பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ரூ.500-க்கான டி.டி. இணைத்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 18-8-2016-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை ஜூலை 30 - ஆகஸ்டு 5 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment