Tuesday, 30 August 2016

விமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை 961 காலியிடங்கள்

விமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை 961 காலியிடங்கள்
விமான நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு 961 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு .மத்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கிளை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL). தற்போது இந்த நிறுவனத்தில் ஏர் கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 961 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பொதுப் பிரிவுக்கு 489 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 258 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 143 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 71 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின் படியும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வுசெய்யும் முறை:
எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-9-2016-ந் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நகல் விண்ணப்பம் மற்றும் சான்றுகள் (ஹார்டு காப்பி) Post box no.12006, Cossipore Post Office,Kolkata 700002 என்ற முகவரிக்கு 31-10-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரத்தை அறிய விரும்புபவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.


No comments:

Post a Comment