Tuesday, 30 August 2016

ராணுவ தொழிற்சாலையில் 568 பணியிடங்கள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு

ராணுவ தொழிற்சாலையில் 568 பணியிடங்கள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராணுவ தளவாட தொழிற்சாலையில் 568 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது சண்டாவில் செயல்படும் ராணுவ தொழிற்சாலையில் 'குரூப்-சி' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 568 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக டி.பி.டபுள்யு. பணிக்கு மட்டும் 422 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர எலக்ட்ரீசியன், கார்பெண்டர், எக்ஸாமினர், மெஷினிஸ்ட், பிளாக்ஸ்மித் உள்ளிட்ட பணிகளுக்கு கணிசமான இடங்கள் உள்ளன.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
கல்வித்தகுதி:
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விளம்பர அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 10 நாட்களுக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய விண்ணப்பம் சமர்ப்பித்ததில் இருந்து அடுத்த 10 நாட்களுக்குள் சென்றடையும் வகையில் நகல் விண்ணப்பம் தபாலில் அனுப்பப்பட வேண்டும். இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்டு 20-26 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ofchanda.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


No comments:

Post a Comment