Tuesday, 16 August 2016

கப்பல் தளத்தில் 395 வேலை வாய்ப்புகள்

கப்பல் தளத்தில் 395 வேலை வாய்ப்புகள்
கப்பல் தளத்தில் 395 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கொச்சின் சிப்யார்டு கப்பல்தளம், பொதுத்துறை கப்பல் நிறுவனமாகும். தற்போது இந்த கப்பல் நிறுவனத்தில் ஒர்க்மேன் பணி இடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 395 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
அதிகபட்சமாக வெல்டர் பணிக்கு 130 பேரும், ஷீட் மெட்டல் ஒர்க்கர் பணிக்கு 40 பேரும், பிட்டர் பணிக்கு 40 பேரும், ஷிப்ரைட் பணிக்கு 20 பேரும், ரிகர் பணிக்கு 40 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். டீசல் மெக்கானிக், பெயிண்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக், புராஜக்ட் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 24-8-2016 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு புராஜக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன.
தேர்வு செய்யும்முறை:
செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24-8-2016-ந் தேதியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment