Tuesday, 9 August 2016

விமான நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 382 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 382 பணியிடங்கள்
விமான நிறுவனத்தில் 382 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:-
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று 'ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.)'. தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெயினி- ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் (ஏ.எம்.இ.) பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவுக்கு - 143 இடங்களும், ஓ.பி.சி. - 75 இடங்களும், எஸ்.டி.- 21 இடங்களும், எஸ்.சி. - 41 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், ஏரோனாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகசேன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பி.இ./ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கேட் தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்ப படிவத்தின் நகல், கொல்கத்தா ஏ.ஐ.இ.எஸ்.எஸ்.எல். நிறுவன முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். நகல் 30-9-16-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.


No comments:

Post a Comment