Monday, 8 August 2016

விமான நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 382 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 382 பணியிடங்கள் 
விமான நிறுவனத்தில் 382 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று 'ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.)'. தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெயினி- ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் (ஏ.எம்.இ.) பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவுக்கு - 143 இடங்களும், ஓ.பி.சி. - 75 இடங்களும், எஸ்.டி.- 21 இடங்களும், எஸ்.சி. - 41 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஏரோனாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகசேன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பி.இ./ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கேட் தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்ப படிவத்தின் நகல், கொல்கத்தா ஏ.ஐ.இ.எஸ்.எஸ்.எல். நிறுவன முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். நகல் 30-9-16-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். கேட் தேர்வு பணியிடங்கள் 102 இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி கிராஜூவேட் டிரெயினி பணிக்கு 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் கேட் தேர்வை அடிப்படையாக கொண்டு நிரப்பப்படுகிறது. பொதுப் பிரிவுக்கு 53 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 27 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 15 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 7 இடங்களும் உள்ளன. 1-7-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ./ பி.டெக் படித்து, கேட் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 15-9-2016-ந் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பமும், 30-9-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பமும் சென்றடைய வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment