Sunday, 14 August 2016

நூலகர் பணிக்கு வரும் 30-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

நூலகர் பணிக்கு வரும் 30-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
நூலகர், உதவி நூலகர் பணிக் காலியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு பணிகள் அடங்கிய நூலகர், உதவி நூலகர் பதவிகளுக்கான 29 காலியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 1, 2 ஆகிய நாள்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வில் பட்டப்படிப்பு தரம்-1,069, பட்டயப்படிப்பு தரம்-740, சான்றிதழ் படிப்பு தரம்-543 என தேர்வர்கள் மொத்தம் 2,352 பேர் கலந்து கொண்டனர்.இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு, அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 19 விண்ணப்பதாரர்கள் பதிவு எண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment