Thursday, 11 August 2016

விமானப்படை வீரர் பணி: 26,28-இல் ஆள் சேர்ப்பு முகாம்

விமானப்படை வீரர் பணி: 26,28-இல் ஆள் சேர்ப்பு முகாம்
இந்திய விமானப் படையில் விமானப்படை வீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தப் பணிக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மணமாகாத, 1996 ஆகஸ்ட் 1 முதல் 1999 நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பிறந்தோர் பங்கேற்கலாம். பிளஸ் 2-வில் 50 சதவீதமும், ஆங்கிலப் பாடத்தில் 50 சதவீதமும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் 26-ஆம் தேதி காலை 6 முதல் 10 வரையில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.கூடுதல் விவரங்களை www.airmenselection.gov.in  என்ற இணையதளத்திலோ அல்லது 044-22390561, 044-22395553 (இணைப்பு-7833) என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அழகுமீனா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment