Tuesday, 16 August 2016

பொதுத்துறை வங்கிகளில் 19243 கிளார்க் பணிகள்

பொதுத்துறை வங்கிகளில் 19243 கிளார்க் பணிகள்
ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு
பொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரத்து 243 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் பின் வருமாறு:-
வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமான (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு கிளார்க் பணிகளுக்கான 6-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-6) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. மொத்தம் 19 ஆயிரத்து 243 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1032 இடங்கள் உள்ளன.
இதற்கான எழுத்து தேர்வு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்த தகுதியான இளைஞர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இதர தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2016-ந் தேதியில் 20 முதல், 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-8-1988 மற்றும் 1-8-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலைகளில் எழுத்து தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, இந்த மதிப்பெண் சான்றுடன் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 ஐ கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் : 12-9-2016
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment