Monday, 8 August 2016

பிரபல வங்கியில் கிளார்க் - அதிகாரி பணிகள் 1315 காலியிடங்கள்

பிரபல வங்கியில் கிளார்க் - அதிகாரி பணிகள் 1315 காலியிடங்கள் 
பிரபல வங்கியில் கிளார்க் மற்றும் அதிகாரி பணிக்கு 1315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று 'பேங்க் ஆப் மகாராஷ்டிரா'. 1895-ல் தொடங்கப்பட்ட பழமையான இந்த வங்கி 29 மாநிலங்களில் ஏராளமான கிளைகளுடன் செயல் படுகிறது. தற்போது இந்த வங்கியில் பொது அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி, கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் : ஜெனரல் ஆபீசர் (எம்.எம்.ஜி.எஸ்.-3) - 100 பேர், ஜெனரல் ஆபீசர் (எம்.எம்.ஜி.எஸ்.-2) - 200 பேர், செக்யூரிட்டி அதிகாரி (எம்.எம்.ஜி.எஸ்.-2) - 15 பேர், கிளார்க் (சட்டம்) - 100 பேர், கிளார்க் (வேளாண்மை) - 200 பேர், ஆபீசர் - 500, கிளார்க் - 200 பேர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்... கல்வித்தகுதி: எம்.பி.ஏ., சட்டப்படிப்பு, வேளாண் படிப்பு படித்தவர்களுக்கும், இதர பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் கோரப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-9-2016-ந் தேதி. இதுபற்றிய விரிவான விவரங்களை www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment