Tuesday, 16 August 2016

துணை ராணுவத்தில் 1206 கான்ஸ்டபிள் வேலை

துணை ராணுவத்தில் 1206 கான்ஸ்டபிள் வேலை
துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 1206 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக மத்திய ராணுவ துணை அமைப்புகள் செயல்படுகின்றன. எல்லைக்காவல் படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ஆயுதப்படை (சி.ஆர்.பி.எப்.), சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.), இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை (ஐ.டி.பி.பீ.), அசாம் ரைபிள் போன்ற படைப்பிரிவுகள் துணை ராணுவத்தில் அடங்கும்.
தற்போது இந்த படைப்பிரிவுகளில் கான்ஸ்டபிள் (கிரவுண்ட் டியூட்டி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1206 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கான தனிப் பிரிவில் 206 பணியிடங்களும், ஆண்- பெண் கலந்த படைப் பிரிவுகளில் 1000 பணியிடங்களும் உள்ளன. படைப்பிரிவு வாரியான மற்றும் இடஒதுக்கீடு வாரியான பணியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மெட்ரிக்குலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். குறிப்பிட்ட உடல் தகுதி பரிசோதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். தட்டச்சு செய்தோ அல்லது கைப்பட எழுதியோ விண்ணப்பம் தயாரிக்கலாம். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் சுய முகவரியிட்ட அஞ்சல் உறை மற்றும் அவசியமான நகல்கள், புகைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு உறையில் இட்டு மூடி ஆட்தேர்வு நடைபெறும் இடங்களில் சென்று நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.24-8-2016 முதல் 2-9-2016 வரை குறிப்பிட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இது பற்றிய விரிவான விவரங்களை www.bsf.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment