Tuesday, 9 August 2016

கேட் தேர்வு பணியிடங்கள் 102

கேட் தேர்வு பணியிடங்கள் 102
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி கிராஜூவேட் டிரெயினி பணிக்கு 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் கேட் தேர்வை அடிப்படையாக கொண்டு நிரப்பப்படுகிறது. பொதுப் பிரிவுக்கு 53 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 27 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 15 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 7 இடங்களும் உள்ளன.
1-7-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ./ பி.டெக் படித்து, கேட் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 15-9-2016-ந் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பமும், 30-9-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பமும் சென்றடைய வேண்டும்.
இவை பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment